November 8, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவிலில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை திறக்கப்படாதது ஏன்?

1 min read

Why has the government hospital built in Sankarankovil not been opened?

7.11.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அரசு மருத்துவமனை கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லாததால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை எடுத்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் அனைத்து வசதிகளுடன் ரூபாய் 9 கோடி செலவில் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டது.

அந்தக் கட்டிடத்தின் கட்டிடப் பணிகள் முழுதும் நிறைவு பெற்று நெடுங்காலமாகியும் இதுவரை அந்த மருத்துவமனை கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை இது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ரூபாய் ஒன்பது கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கட்டிடமும், அந்த புதிய கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள நுண்கதிர் படமெடுக்கும் கருவிகள், அறுவை சிகிச்சைக்கான சி-ஆர்ம் எக்ஸ்ரே கருவிகள், நோயாளிகள் படுக்கைகள், நாற்காலிகள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன. அவசர காலத் தேவைக்கான 120 கிலோவாட் ஜெனரேட்டரும் தற்போது நிறுவப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா கூறியதாவது:
புதிய கட்டடத்தில் முறையான விதிகள் பின்பற்றப்படாததால் டி.டி.சி.பி., அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கட்டடத்தின் வெளிப்புறத்தில் சன் ஷேடு அமைக்கப்படாததால் மழைநீர் உள்ளே விழும் நிலை உள்ளது. அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். முறையான அனுமதி கிடைத்த பின்னரே கட்டடத்தை எங்கள் துறை ஏற்றுக்கொள்ளும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு போதிய இடவசதி இல்லாத நிலையில், புதிய கட்டடத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *