November 9, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலில் பி.டி.உஷா போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்

1 min read

P.T. Usha has lost the opportunity to contest in the Indian Olympic Association elections

9.11.2026

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா உள்ளார். அவரின் 4 ஆண்டு பதவிக்காலம் டிசம்பர் 10ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிறந்த தடகள வீரர்களுக்கான தேர்தல் ஆன்லைன் முறையில் நடந்தது. இதில், முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் ராணி ரம்பால், முன்னாள் வில்வித்தை வீரர் தோலா பானர்ஜி, பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல், பிடி உஷா மற்றும் அனிதா பால்துரை ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், பிடி உஷா தோல்வியடைந்தார். இதனால், அவர் மீண்டும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியாது.
அஞ்சு பாபி ஜார்ஜூக்கு -53
ராணிரம்பால் – 50தோலா பானர்ஜிக்கு – 45
செய்னா நேவலுக்கு – 43
பிடி உஷாவுக்கு – 40
அனிதா பால்துரைக்கு – 6 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.

தேர்தலில் முதல் நான்கு இடங்களை பெற்றவர்கள் மட்டுமே, இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட முடியும். அந்த வகையில், பி.டி.உஷா, அனிதா பால் துரை ஆகியோர் தேர்தலில் போட்டியிட முடியாது.

இதுவரை தலைவராக இருந்தவர்கள் விவரம் வருமாறு:-
சர் டோரப்ஜி டாடா , மகாராஜா பூபிந்தர் சிங், மகாராஜா, தவீந்திரா சிங், ராஜா பலேந்திர சிங், ஓ.பி. மெஹ்ரா, ராஜா பலேந்திர சிங், வித்யா சரண் சுக்லா, டாக்டர் பி. சிவந்தி ஆதித்தன், சுரேஷ் கல்மாடி, அபய் சிங் சௌதாலா, என். ராமச்சந்திரன், நரேந்தர் துருவ் பத்ரா, தற்போது வரை பி. டி. உஷா (சங்கத்தின் முதல் பெண் தலைவர்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *