November 9, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக லஞ்சு புகார் தெரிவிக்க போன் நம்பர் அறிவிப்பு

1 min read

Phone number announced for reporting bribery complaints against central government employees

9.11.2026
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில், லஞ்சம், ஊழலற்ற நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த, த.வெ.க., அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக, தலைமைச் செயலகம் தொடங்கி, கிராம நிர்வாக அலுவலகம் வரை, ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்பட்டு உள்ளன. அரசு அலுவலகங்களில் நடக்கும், லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, லஞ்ச ஒழிப்பு துறை சார்பில், ‘வாட்ஸாப் எண்’ வெளியிடப்பட்டு உள்ளது.
அதேபோல், மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., சார்பில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், புகார் அளிக்க, 94444 42519 என்ற மொபைல் போன் வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் [email protected] என்ற ‘இ – மெயில்’ முகவரியும் வெளியிடப்பட்டு உள்ளது. இதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வசதியாக, மொபைல் போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *