November 10, 2026

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

1 min read

Flag-hoisting ceremony for the Kanda Sashti festival at the Vennimalai Murugan Temple in Pavurchatram

10.11.2026
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் சிறிய குன்றின்மீது வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மாசி பெருந்திருவிழா மற்றும் கந்த சஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில், இந்த ஆண்டின் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. இன்று காலை கணபதி ஹோமமும் கொடியேற்றமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருகிற 16ந்தேதி வரை திருவிழா நடைபெறவுள்ளது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகின்ற 15ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலையில் கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16 ந்தேதி (திங்கள்கிழமை) இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *