November 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தூங்கும் போட்டியில் ரூ.9.63 லட்சம் பரிசு வென்ற மும்பை பெண்

1 min read

Mumbai woman wins Rs 9.63 lakh prize in a sleeping contest

10.11.2026
மும்பையை சேர்ந்த ஜினியா சாட்டர்ஜி என்ற பெண், தூங்குவதையோ ஒரு அரிய வாய்ப்பாக மாற்றி, ரூ.9 லட்சத்து 63 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் இலவச சுற்றுலாவை வென்று சாதனை படைத்துள்ளார்.

நாடு முழுவதிலும் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்த இந்த வினோத போட்டிக்கு, கடுமையான நேர்காணல்களுக்கு பிறகு வெறும் 10 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுமார் 60 நாட்கள் நடந்த இப்போட்டியில், பங்கேற்பாளர்களின் தினசரி தூக்க அளவுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.

இது வெறும் அதிக நேரம் தூங்குவது மட்டுமல்லாமல், திரைப்பட காட்சிகளை தூக்க பாணியில் மாற்றுவது, உரையாடல்களுக்கு நடுவே ‘தலையணை’, ‘பெட்ஷீட்” ஆகிய வார்த்தைகளை ரகசியமாக பயன்படுத்துவது போன்ற சுவாரசியமான வாராந்திர சவால்களும் இதில் இடம்பெற்றன. இறுதி போட்டியில் தங்களுக்கு பிடித்தவாறு ஏலம் எடுத்து அமைக்கப்பட்ட படுக்கையறையில் அவர்கள் தூங்கவைக்கப்பட்டனர்.

அதில் சிறந்த தூக்க புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்த ஜினியாவுக்கு ரூ.9 லட்சத்து 63 ஆயிரம் மற்றும் இலவச சொகுசு சுற்றுலா பயணத்திற்கான டிக்கெட்டும் பரிசாக வழங்கப்பட்டது. இந்தப்பெண்ணின் சாதனை தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இப்போட்டியின் அடுத்த சீசனுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *