சபரிமலையில் நெய் தட்டுப்பாடு- தேவஸ்தானம் கவலை
1 min read
Shortage of Ghee at Sabarimala – Devaswom Concerned
10/11/20261
சபரிமலை அய்யப்பன் கோவில் சீசன் நெருங்கும்நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்தான வாரிய கூட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து, வாரியத்தின் தலைவர் ஜெயகுமார் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சபரிமலையில் நெய் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதனால் நெய்க்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற கவலை எழுந்துள்ளது. புதிய சப்ளை 17-ந் தேதியில் இருந்துதான் வரும். அதுவரை கூடுதல் நெய்யை கொள்முதல் செய்வது பற்றி ஆலோசனை நடத்தினோம். ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஏனென்றால் கடந்த ஆண்டு கொள்முதலில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்த சட்ட அம்சங்களை ஆய்வு செய்ய வேண்டும். அதுதொடர்பாக சட்ட ஆலோசனை பெற்ற பிறகு நெய் கொள்முதல் செய்யப்படும். மற்றபடி, அரவணை பாயாசம், அப்பம் இருப்பு குறித்து பிரச்சினை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.