தென்காசி மாவட்ட சமூக நல ஆர்வலர்கள் ஆட்சியருடன் சந்திப்பு
1 min read
Social welfare activists from Tenkasi district meet with the District Collector
10.11.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணாவுடன் விதைப்பந்து நிமித்தமான சந்திப்பு
தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவரை விதைப்பந்துகள் தயாரிப்பு சம்பந்தமாக வெங்காடம்பட்டி திருமாறன், காந்தியவாதி விவேகானந்தன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி சந்தித்து பேசினார்.
விரிந்து பரந்த தென்காசி மாவட்டம் முழுவதும் விதைப்பந்து வீச்சால் மரங்கள் வளர்க்க தென்காசி மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அவர் உத்தரகாண்ட் மாநிலத்தின் டேஹ்ராடூன் பகுதியின் மரங்கள் நிறைந்த கிராமத்திலிருந்து வந்தவர் என்பதால் பசுமை அபிவிருத்தியில் மிகுந்த ஆர்வமாக உள்ளார். விதைப்பந்து பிரச்சாரகர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் மாவட்ட ஆட்சியருக்கு விதைப்பந்துகளை வழங்கி திட்டத்தை விளக்கினார். கலெக்டர் மிகுந்த ஆர்வமாக விதைப்பந்து செய்து எரியும் திட்டத்தை கேட்டறிந்தார்.
தென்காசியில் அதனை அமல்படுத்த விருப்பம் தெரிவித்தார். எக்ஸ் நோரா தலைவி டாக்டர் விஜயலட்சுமி தமது மரம் வளர்ப்பு அனுபவங்களையும், மண்புழு ஆராய்ச்சியையும் ஆட்சியருக்கு விளக்கினார். காந்தியவாதி விவேகானந்தன் தாம் எழுதிய காந்திய நூல்களை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கினார். விரைவில் தென்காசி மாவட்டத்தில் விதைப்பந்து விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலெக்டர் மோனிகா ராணாவின் பதவி காலத்தில் தென்காசி மாவட்டம் மட்டற்ற மரங்களால் அலங்கரிக்கப்பட ஆவன செய்யப்பட வேண்டும் என்று திருமாறன் நேரில் வேண்டினார். இந்த சந்திப்பின்போது அம்பை காந்தி உடனிருந்தார்.