November 13, 2026

Seithi Saral

Tamil News Channel

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா ரூ. 25 லட்சம்

1 min read

An additional Rs. 25 lakh each for families affected by the Sterlite protest

11.11.2026
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அந்தக் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ. 5.25 கோடி வழங்க முதல் அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 22.05.2018 மற்றும் 23.05.2018 ஆகிய நாள்களில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது உயிரிழந்த 13 நபர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 25 லட்சமும் மற்றும் கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்குத் தலா ரூ. 5 லட்சமும் நிவாரண நிதியாக ஏற்கெனவே வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதல் நிவாரணம் வழங்கிடக் கோரி முதல்வரிடம் முறையிட்டதன்பேரில், அதனைக் கனிவுடன் பரிசீலனை செய்து, நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி, இந்தப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் 13 குடும்பங்களுக்கு வழங்கவேண்டிய தலா ரூ. 50 லட்சத்தில் ஏற்கனவே வழங்கிய ரூ. 25 இலட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ. 25 லட்சம் வீதம் ரூ. 3.25 கோடியும், கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்கு வழங்கவேண்டிய தலா ரூ. 10 லட்சத்தில் ஏற்கனவே வழங்கிய ரூ. 5 லட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ .2 கோடியும் என மொத்தம் ரூ. 5.25 கோடி கூடுதல் நிவாரண நிதியாக வழங்க முதல் அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *