November 14, 2026

Seithi Saral

Tamil News Channel

அச்சன்புதூர் கிராமத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை நிகழ்ச்சி

1 min read

Electronic National Agriculture Market (e-NAM) event in Achanpudur village

11.11.2026
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டாரம் வேளாண்மை துறை – வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) திட்டத்தின் கீழ், வேளாண் விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பாக அச்சன்புதூர் கிராமத்தில் வைத்து மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் பண்ணை வாயில் சந்தைப்படுத்துதல் குறித்த உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) திருமதி. வசந்தி அவர்களின் அறிவுறுத்தலின் படியும், வேளாண்மை உதவி இயக்குனர் தென்காசி திருமலைச்சாமி அவர்கள் வழிகாட்டுதலின் படியும் இப்பயிற்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமதி இலக்யநிலா வரவேற்புரை வழங்கியதோடு, அட்மா திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் செயல் விளக்கங்கள் பற்றி எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) திருமதி. வசந்தி அவர்கள் புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவன செயல்பாடுகள் மற்றும் அரசு அறிவித்த திட்டங்கள் பற்றி துல்லியமாக எடுத்துரைத்து விவசாயக்குழு அமைக்கவும் அறிவுறுத்தினார்கள்.

இப்பயிற்சியில் வேளாண் அலுவலர் (வே. வ) முகுந்தாதேவி கலந்து கொண்டு, வேளாண் வணிகத் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள், FPO குழுக்கள் உருவாக்குதல் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, கடையநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் திருமதி. உமா தேவி அவர்கள் பேசுகையில், துறையில் இருக்கும் உள் கட்டமைப்பு வசதிகள், பொருளீட்டு கடன் வசதி மற்றும் மின்னணு தேசிய சந்தை (e-NAM) ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விரிவான உரை அளித்தார். துணை
வேளாண்மை அலுவலர் (பணி நிறைவு )ஷேக் முகைதீன் அவர்கள் கலந்து கொண்டு, பண்ணை வாயில்(Farmgate) சந்தைப்படுத்துதல், விற்பனை வாய்ப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
பயிற்சியின் இறுதியாக உதவி வேளாண்மை அலுவலர் (வே. வ) இப்ராஹிம் நன்றியுரை வழங்கினார். இப்பயிற்சிக்கு தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளையும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மாரிராஜ் மற்றும் அன்பழகன் ஆகியோர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *