November 12, 2026

Seithi Saral

Tamil News Channel

துணை சபாநாயகரை கண்டித்து ஆர்ப்பாட்டம்; 50 பேர் கைது

1 min read


Protest against Deputy Speaker; 50 people arrested

11.11.2026
துறையூரில், கோரிக்கை மனு கொடுக்க சென்றவரை தாக்கிய துணை சபாநாயகரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.,வினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த கார்த்திக், துறையூர் த.வெ.க., – எம்.எல்.ஏ.,வும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் வீட்டுக்கு கோரிக்கை மனு அளிக்க சென்றார். அப்போது, ரவி சங்கர், கார்த்திக்கை தாக்கியதை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தி.மு.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

துறையூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, தி.மு.க., திருச்சி வடக்கு மாவட்ட செயலர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., ஸ்டாலின் குமார் உட்பட 50க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.,வினரை, போலீசார் கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *