November 15, 2026

Seithi Saral

Tamil News Channel

இங்கிலாந்தில் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்; இந்திய மாணவர் 30 ஆண்டு சிறை

1 min read

Child sexual abuse in England: Indian student sentenced to 30 years in prison

14.11.2026
கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்தின் டெர்பிஷைர் மாகாணத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, ‘ஸ்னாப்சாட்’ சமூக வலைதளம் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் பழக்கமாகியுள்ளார். அந்த நபர் தனது பெயரை ரீஸ் என்றும், தனக்கு 13 வயதுதான் ஆகிறது என்றும் கூறியதை நம்பி, அவருடன் சிறுமி ஆன்லைனில் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்த பழக்கத்தை பயன்படுத்தி அந்த நபர் சிறுமியின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கேட்டு வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமி தன்னால் இனி புகைப்படங்கள் எதுவும் அனுப்ப முடியாது என்று கூறியபோது அந்த நபர் சிறுமியை மிரட்ட தொடங்கியுள்ளார். தனது ஆசைகளுக்கு இணங்காவிட்டால், சிறுமியின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன சிறுமி, வேறு வழியின்றி அந்த நபர் கேட்டதுபோல் மீண்டும் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இதனிடையே திடீரென ஒருநாள் சிறுமியின் ‘ஸ்னாப்சாட்’ பக்கம் ஹேக் செய்யப்பட்டு, சிறுமியின் அந்தரங்க புகைப்படங்கள் அவரது நண்பர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் டெர்பிஷைர் காவல்துறையிடம் சிறுமி புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சிறுமியிடம் பழகிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் இங்கிலாந்தின் செஸ்டர் நகரில் வசித்து வந்த பிலால் காஸி என்ற மாணவர் என்பதும், அவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டது. ஆனால் போலீசாரின் விசாரணை தொடங்கிய சமயத்தில் பிலாஸ் காஸி இங்கிலாந்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

இந்த நிலையில், 2023-ம் ஆண்டு பிலாஸ் காஸி மீண்டும் இங்கிலாந்து சென்றபோது, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆன்லைன் மூலம் பிலால் காஸி இதுவரை சுமார் 180-க்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பதும், அவரால் பாதிக்கப்பட்ட அனைவரும் 11 முதல் 17 வயது வரை உடைய மைனர்கள் என்பதும் தெரியவந்தது.

இதில் சுமார் 70 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் இருந்து போலீசார் வாக்குமூலங்களை சேகரித்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் பிலாஸ் காஸி, சிறுமிகளை குறிவைத்து அவர்களுடன் ஆன்லைனில் நட்பாக பழகி வந்துள்ளார். தனது முகப்பு படத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சிறுவன் போல் போலியான புகைப்படத்தை வைத்துக் கொண்டு, தன்னைப் பற்றிய பொய்யான தகவல்களை அவர்களிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பி பல சிறுமிகள் அவரிடம் நெருக்கமாக பழகியுள்ளார். சிறுமிகளின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, அவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கேட்டுப் பெற்ற பிலாஸ் காஸி, பின்னர் அந்த புகைப்படங்களை வைத்து சிறுமிகளை மிரட்டி வந்துள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. பிலாலின் அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான சிறுமிகள் மனதளவில் நீண்ட கால பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாராணை செஸ்டர் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தையும் போலீசார் கோர்ட்டில் சமர்ப்பித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிலால் காஸிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *