ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி தனித்தனி பாதையில் பயணிக்க முடிவு
1 min read
Adhav Arjuna and his wife Daisy decide to go their separate ways
16.11.2026
தமிழ்நாட்டு அரசின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்து வருகிறார் ஆதவ் அர்ஜுனா. இவர், பிரபல லாட்டரி தொழில் செய்து வரும் சாண்டியாகோ மார்டின்- லீமா ரோஸ் மார்டினின் மகள் டெய்சியை காதலித்து திருமணம் செய்திருந்தார். ஆதவ் அர்ஜுனா அமைச்சராக பதவியேற்ற நாளில் கூட டெய்சி விழாவுக்கு வந்திருந்தார். இந்நிலையில் 14 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் துணையாகப் பயணித்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவும் நானும் பரஸ்பர சம்மதத்துடன் தம்பதிகளாகப் பிரிந்து, தனித்தனி பாதைகளில் பயணிக்க முடிவு செய்துள்ளோம் என்று அவரது மனைவி டெய்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
14 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம் அன்பு, புரிதல் மற்றும் பல்வேறு மாற்றங்கள் நிறைந்ததாக அமைந்தது. நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணையாகவும், பெற்றோர்களாகவும் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை ஒன்றாகக் கடந்து வந்துள்ளோம். தற்போது ஆதவ் அர்ஜுனாவும் நானும் பரஸ்பர சம்மதத்துடன் தம்பதிகளாகப் பிரிந்து, தனித்தனியாகப் பயணிக்க முடிவு செய்துள்ளோம். இது எங்கள் இருவருக்கும் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும்.
இருப்பினும், எங்கள் குழந்தையை இணைந்து வளர்ப்பதிலும், குழந்தையின் மகிழ்ச்சி மற்றும் நலனை உறுதி செய்வதிலும் எங்களது அர்ப்பணிப்பு என்றும் தொடரும். குழந்தையின் நலனே எங்களது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். ஆதவ் அர்ஜுனா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் தேர்ந்தெடுக்கும் அனைத்துப் பாதைகளிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வெற்றி கிடைக்க மனதார வாழ்த்துகிறேன்.
இந்த மாற்றமான சூழலை நாங்கள் கடந்து செல்லும் நிலையில், அனைவரும் எங்களது முடிவைப் புரிந்துகொண்டு, அன்புடனும், தனிப்பட்ட வாழ்க்கைக்கான மதிப்புடனும் அணுகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.