November 18, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பரங்குன்றம் மலையில் தீபம்: சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம்

1 min read

Deepam on Tiruparankundram Hill: Heated Debate in the Supreme Court

18.11.2026
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதனை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட் இரு நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி விசாரிக்கின்றனர். நேற்று தமிழக அரசு வாதங்களை முன்வைத்தது.

இன்று கலெக்டர் தரப்பில் வைக்கப்பட்ட வாதம் வருமாறு:- திருப்பரங்குன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக கோவில்அருகே தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதைவிடுத்து தர்கா இருக்கும் இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என மனுதாரர் கூறுகிறார்.
தீபத்தூண் உள்ள பகுதி கோவில் நிர்வாகத்துக்கு சொந்தம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்த பகுதிக்கு செல்லும் இடங்கள் அனைத்தும் தர்கா நிர்வாகத்துக்கு சொந்தம்.

ஆங்கிலேயர் காலத்தில் மலைப்பகுதி நிலத்தை அளவீடு செய்ய கல்தூண்கள் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய தூண்களில் சில விரிவாக்கத்தின் போது கோவிலுக்குள் சென்று பிறகு வழிபாட்டுக்குள் வந்தது. அந்த வகையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது நிலத்தை அளவிடும் கல்தூண்.

பார்ப்பதற்கு தீபம் ஏற்றும் தூண் போல உள்ளதால் மட்டுமே அதில் தீபம் ஏற்ற வேண்டும் என கோருகின்றனர். எவரெஸ்ட் சிகரத்திலும் இதே போன்ற அளவைக்கல்லையும் பார்க்கலாம். இவ்வாறு கலெக்டர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *