சங்கராபுரம்: வீட்டில் துாங்கிய 2 குழந்தைகள் பாம்பு கடித்து சாவு
1 min read
Sankarapuram: Two children sleeping at home die after being bitten by a snake
18/11/20-26
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், முக்கனுாரைச் சேர்ந்தவர் சந்திரன், 27. ஆந்திராவில், நெல் அறுவடை இயந்திர டிரைவராக வேலை பார்க்கிறார். நேற்று (நவ.,17) இரவு, முக்கனுாரில் ஏரிக்கரையோரம் உள்ள வீட்டில் சந்திரனின் மனைவி புஷ்பா, 24, அவரது இரு குழந்தைகளான தர்ஷிணி, ஜனனி ஆகியோர் துாங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு, 12:00 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு, புஷ்பா, தர்ஷிணி, ஜனனியை கடித்தது. இதில், புஷ்பாவும் அவரது இரு குழந்தைகளும் வலியால் துடித்தனர். அக்கம்பக்கத்தினர், புஷ்பா மற்றும் குழந்தைகளை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வழியிலேயே குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் புஷ்பா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சங்கராபுரம் போலீசார், வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.