வி.எஸ். பாபு உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி
1 min read
Chief Minister Vijay pays personal tribute to V.S. Babu’s mortal remains
19/11/2026
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம்தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
70 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், இன்று மதியம் 2.24 மணியளவில் வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வி.எஸ். பாபுவின் உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். பெரம்பூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபுவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்-அமைச்சர் விஜய், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.