November 20, 2026

Seithi Saral

Tamil News Channel

பரமக்குடி தொகுதியில் வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்

1 min read

Special voter registration camp in Paramakudi constituency

20/11/2026
தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த 12 ம்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரமக்குடி சட்டமன்ற ( தனி) தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், பரமக்குடி சார் ஆட்சியருமான மருத்துவர் ச.வினோதினி பொதுமக்களுக்கு வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதன்மூலம், பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதியில் இன்றும் ,நாளையும் (நவ.21,22 தேதிகள்) மற்றும் வரும் 28 ம்தேதி ஆகிய 3 நாட்கள் வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. முகாமில் வாக்காளர் பதிவு செய்தல், வாக்காளர் பெயர் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்தல் பணிகளை செய்து கொள்ளலாம் என தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், பரமக்குடி சார் ஆட்சியருமான மருத்துவர் ச.வினோதினி கூறினார்.

நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதியின் உதவி வாக்கு பதிவு அலுவலரும்,பரமக்குடி வட்டாட்சியருமான என். ரெங்கராஜ், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் மாதவன், பரமக்குடி வருவாய் தவநிதி, கிராம நிர்வாக அலுவலர்கள் தாமரைக் கண்ணன் (வேந்தோணி), செல்வஹரிஸ் (காட்டுபரமக்குடி),லோகநாதன்( எமனேசுவரம்) ஆகியோர் உடன் இருந்தனர்.

=குணாளன், நிருபர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *