November 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையம் அமைக்க அனுமதி

1 min read

Permission granted to set up a new thermal power plant in Thoothukudi

20.11.2026
தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில், 1,600 மெகா வாட் திறனில், புதிய அனல் மின் நிலையம் அமைக்க, மின் வாரியத்திற்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில், தலா, 210 மெகா வாட் திறனில், ஐந்து அலகுகளில் மின் உற்பத்தி நடக்கிறது. ஒரு அனல் மின் நிலையத்தின் ஆயுள்காலம், 25 ஆண்டுகள்.


சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க, பழைய அனல் மின் நிலையங்களில், நிலக்கரி கையாளுவதில், புதிய தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துமாறு, அனைத்து மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், துாத்துக்குடி மின் நிலையத்தில், ஏற்கனவே உள்ள அலகுகளை, படிப்படியாக மாற்றி அமைத்து, அந்த வளாகத்தில் தலா, 800 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய புதிய அனல் மின் நிலையத்தை, 20 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.


இத்திட்டம், ‘பொது – தனியார்’ கூட்டு முயற்சி வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை, முதல்வர் விஜய் சட்டசபையில், கடந்த செப்டம்பரில் வெளியிட்டார்.


அதன்படி, துாத்துக்குடி மின் நிலைய வளாகத்தில், புதிய அனல் மின் நிலையம் அமைக்க ஒப்புதல் அளித்து, மின் வாரியத்திற்கு, தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
-

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *