November 20, 2026

Seithi Saral

Tamil News Channel

காவிரி வழக்கில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி-“எத்தனை வழக்குகளைத்தான் தாக்கல் செய்வீர்கள்?”

1 min read

Supreme Court asks Tamil Nadu government in the Cauvery case: “How many more petitions are you going to file?”

20.11.2026
எத்தனை வழக்குகளைத்தான் காவிரி விவகாரத்தில் தாக்கல் செய்வீர்கள்? என அரசின் புதிய மனுவுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 12,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு அக். 23-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

இருந்தபோதிலும், அக். 24 முதல் 27 வரையிலான காலகட்டத்தில், தமிழகத்துக்கான 12,000 கன அடி நீருக்கு பதிலாக 8,149 கன அடி மட்டுமே பெறப்பட்டது. அதேநேரம், கா்நாடகத்தின் 4 முக்கிய நீா்த்தேக்கங்களிலும் அக். 27-ல் நீா் இருப்பு 52.189 டி.எம்.சியாக இருந்தது.

இந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி காவிரி நீரைத் திறந்து விடவில்லை என கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அதில், தமிழக தமிழகத்துக்கு இந்தாண்டு காவிரி நீர் வழங்கப்படாததால், 4 லட்சம் ஹெக்டர் நிலம் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கர்நாடக அரசு இப்படி வஞ்சித்தால் தமிழக விவசாயிகள் எப்படி விவசாயம் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டுக்கான உரிய நீரையும் நீதியையும் வழங்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற்றுதரக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ்குமார் சிங் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் கோரிக்கைகளை நிராகரித்து மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் உமாபதி, காவிரி நீர திறப்பு விவகாரத்தில் தமிழக அரசு புதிதாக ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், குறிப்பாக, அக்டோபர் 23-ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் விகிதம் 15 நாட்களுக்கு திறக்க உத்தரவிட்டும் கர்நாடகா அதனைச் செயல்படுத்தவில்லை என தெரிவித்தார்

அப்போது நீதிபதிகள் காவிரி நீர் விவகாரத்தில் எத்தனை மனுக்கள் தான் தாக்கல் செய்வீர்கள்? எத்தனை மனுக்கள் வந்தாலும் தற்போது அதனை தள்ளுபடி செய்ய போகிறோம் என தெரிவித்தனர்.

அதற்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் உமாபதி புதிய மனுவின் விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் அதில் வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளை பார்த்து அதன் பின்பு முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனையடுத்து, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய இடைக்கால மனு மீதான விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *