November 20, 2026

Seithi Saral

Tamil News Channel

அகிலேஷின் ‘ரோடு ஷோ’-வின்போது புல்டோசர் மோதி பாஜக நிர்வாகி மகன் பலி

1 min read

Son of a BJP official killed during Akhilesh’s ‘road show’

20.11.2026
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷின் ‘ரோடு ஷோ’வின்போது புல்டோசர் மோதி பாஜக நிர்வாகி மகன் உயிரிழந்தார்.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கையை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், அம்மாநிலத்தின் கோரக்ப்பூர் மாவட்டத்தில் புதன் அன்று சமாஜ்வாதி கட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமாஜ்வாதி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அகிலேஷ் ’ரோடு ஷோ’வாக சாலைவலம் சென்றார். அப்போது அகிலேசை பிரமாண்ட மாலை அணிவித்து வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மாலையை சூடுவதற்காக புல்டோசரும் கொண்டுவரப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்த அகிலேசுக்கு புல்டோசர் மூலம் பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

இதையடுத்து ரோடு ஷோவுக்குப்பின் புல்டோசர் சாலையில் சென்றுள்ளது. அப்போது, சாலையில் நடந்து சென்ற 10ம் வகுப்பு மாணவனான ஆர்யவர்தன் மீது புல்டோசர் மோதியது. இந்த விபத்தில் மாணவன் ஆர்யவர்தன் படுகாயமடைந்த நிலையில் அவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஆர்யவர்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேவேளை, போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த மாணவன் ஆர்யவர்தன் கோரக்ப்பூர் பாஜக நிர்வாகி ஓம்கர் சிங்கின் மகன் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் புல்டோசர் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அக்கட்சியின் நிர்வாகி சாது உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *