November 22, 2026

Seithi Saral

Tamil News Channel

13 வயது சிறுமி பலாத்காரம் தாயின் கள்ளக்காதலன் கைது

1 min read


13-year-old girl raped; mother’s illicit lover arrested

21.11.2026
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே, 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், அவரது தாயின் கள்ளக்காதலன் அஜித்குமார், 26, என்பவர், இரு மாதங்களுக்கு பின், சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சிதறாலை சேர்ந்த, 35 வயது பெண் ஒருவர், கணவரை பிரிந்து தன் மகளுடன் வாழ்ந்தார். கோவையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்தபோது, உடன் பணிபுரிந்த, கோவை குறிச்சி ரோடு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் வேலையை விட்டுவிட்டு அருமனை அருகே, புண்ணியம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர். மூன்று ஆண்டுகளாக இருவரும் இணைந்து வாழ்ந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன், அஜித்குமார் மாயமானார்.

இந்நிலையில், 7ம் வகுப்பு படிக்கும் தன் மகள் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த தாய், விசாரித்ததில், அஜித்குமார் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. சிறுமியின் தாய், மார்த்தாண்டம் மகளிர் போலீசில் அளித்த புகாரின்படி போலீசார், ‘போக்சோ’வில் வழக்கு பதிந்தனர்.

சென்னையில் தலைமறைவாக இருந்த அஜித்குமார், இரு மாதங்களுக்கு பின், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *