November 23, 2026

Seithi Saral

Tamil News Channel

பிளஸ் 1 மாணவியை கொன்று காதலன் தற்கொலை முயற்சி

1 min read

Lover kills Plus 1 student, then attempts suicide

21.11.2026
வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 1 மாணவி குத்திக் கொலை செய்யப்பட்டார். போலீசாருக்கு பயந்து விஷம் குடித்த அவரது காதலன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துாத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள இருவப்பபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜா(வயது 23). வெல்டிங் பட்டறை தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி அபர்ணா( 16), என்பவரை காதலித்தார்.

இரு வீட்டாருக்கும் காதல் விவகாரம் தெரியவந்ததும், ‘அபர்ணா படிப்பை முடித்ததும் திருமணம் பற்றி பேசிக் கொள்ளலாம்’ என, முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, அபர்ணா வேறொரு நபருடன் மொபைல்போனில் பேசுவதாக சந்தேகமடைந்த முத்துராஜா, அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று பள்ளி விடுமுறை என்பதால், அபர்ணா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அங்கு சென்ற முத்துராஜா, அபர்ணாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென அபர்ணாவில் கழுத்தை நெரித்த முத்துராஜா, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பின்னர், கையில் எடுத்துச் சென்ற விஷத்தை குடித்துவிட்டு, முத்துராஜா அங்கேயே மயங்கி விழுந்தார். அபர்ணாவின் கூச்சல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், சாயர்புரம் போலீசாருக்கு தெரிவித்தனர்.

போலீசார் அபர்ணா உடலை கைப்பற்றினர். முத்துராஜாவை துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாயர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துாத்துக்குடி தி.மு.க., – எம்.பி., கனிமொழி, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
துாத்துக்குடி மாவட்டம், வேதமாணிக்கபுரத்தில் மாணவி வீடு புகுந்து குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை எனும் மோசமான சூழலுக்குள் தமிமிழகத்தை தள்ளி இருக்கிறது தரங்கெட்ட த.வெ.க., அரசு. சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே துாங்கிக் கொண்டிருக்கிறது? பெண்களின் பாதுகாப்பு குறித்து வாய்கிழிய வசனம் பேசிய முதல்வர் ஜோசப் விஜய், இந்த சம்பவங்கள் கொஞ்சம் கூட உங்களை உறுத்தவில்லையா?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *