November 24, 2026

Seithi Saral

Tamil News Channel

எம்.எல்ஏ பிரச்சினையில் யாரையும் காப்பாற்றும் முயற்சி கூடாது; போலீசாருக்கு ஐகோர்ட் கண்டிப்பு

1 min read

No attempts should be made to shield anyone in the MLA case; High Court’s stern directive to the police

24.11.2026

ஆபாச மெசேஜ் அனுப்பியதாக மாவட்ட பெண் கலெக்டர் அளித்த புகாரில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ., அருள் விக்னேஷ் வீட்டுக்கு போலீஸ் சென்று விசாரித்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையமும் தானாக முன்வந்து டிஜிபியிடம் அறிக்கை கேட்டுள்ளது. கலெக்டருக்கு தொல்லை கொடுத்தது தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

கலெக்டரிடம் விசாரித்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக இன்று போலீசார் தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. நேற்று புகார் வந்ததாகவும், நேற்றே வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி லட்சுமி நாராயணன் அரசு தரப்பிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
அதாவது “எம்எல்ஏ மீது புகார் அளித்துள்ள பெண் அதிகாரிக்கு எதிரான அவதுாறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது பெண் கலெக்டர் புகாரில் அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது. விசாரணையை ஐஜி அல்லது டிஐஜி கண்காணிக்க வேண்டும்.” என்று உத்தரவிட்ட நீதிபதி, ‘எம்எல்ஏ., மீது ஜூலை மாதமே கள்ளக்குறிச்சி கலெக்டர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்’ என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் ஜூலை 31ம் அன்று உங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அரசு நடவடிக்கை எடுக்க தவறியது ஏன்? தாமதம் ஏன்?
இந்தச் செய்தி வெளியான உடனே ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை? இது குறித்து நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? இதைச் செய்யும்படி நான் உங்களுக்குப் பரிந்துரைக்க வேண்டுமா? நீங்களே ஏன் இதைச் செய்யக் கூடாதா? புகார் அளித்த மாவட்ட பெண் கலெக்டருக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஒரு பெண்ணின் சிரமத்தைப் புரிந்துகொள்ள நீங்கள் பெண்ணாக இருக்க வேண்டியதில்லை. தலைமைச் செயலாளராக இருந்தாலும் சரி, துப்புரவுத் தொழிலாளியாக இருந்தாலும் சரி, பெண்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்று நான் உங்களிடம் கூறியிருந்தேன். அது ஏன் சமூக ஊடகங்களில் உள்ளது?

என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின்னர் வழக்கு விசாரணையை நவ.,27க்கு ஒத்திவைத்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *