November 26, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

1 min read

Three sentenced to life imprisonment in a murder case near Kadayam

26.11.2026
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மனைவி பால்கனி அதே ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவருடன் தகாத உறவு வைத்திருந்தார். இதை பலமுறை கண்டித்தும் இருவரும் அதனை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு கருப்பசாமியின் மனைவியான பால்கனியை கணேசன் என்பவர் கேரளாவிற்கு கூட்டிச் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி கடந்த 25.03.2016ம் தேதி தனது மனைவியை கூட்டிச் சென்ற கணேசனின் மனைவி ஈஸ்வரி என்பவரை கருப்பசாமி வெட்டி கொலை செய்துவிட்டார்.
இந்த கொலையில் இறந்துபோன ஈஸ்வரி என்பவரின் அண்ணன் முறைகளான எதிரிகள் ஆத்திரம் அடைந்த நிலையில்
கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து 7.12.2016ம் தேதி கருப்பசாமி பிணையில் வந்தநிலையில் வெள்ளிகுளம் ஊய்க்காடு சுடலைமாடசாமி கோவில் அருகே வைத்து ஈஸ்வரியின் அண்ணன்கள் பாப்பான்குளம் பாட்டத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் கார்த்திகேயன், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் வைகுண்டம், சுப்பையா என்பவரது மகன் குமார்; ஆகிய
மூன்று பேரும் சேர்ந்து கருப்பசாமியை கொலை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரிகள் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி பி.ராஜவேல் தலைமையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் நீதிபதி பி.ராஜவேல் குற்றவாளிகளான கார்த்திகேயன், வைகுண்டம், குமார், ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும் அபராதமாக ரூபாய் இரண்டாயிரமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் அ.அருண் ஆஜரானார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *