November 27, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே பள்ளி ஆசிரியை வீட்டில் 21 பவுன் நகை கொள்ளை

1 min read

21 sovereigns of gold jewellery stolen from a school teacher’s house near Kadayam

26/11/2026
தென்காசி மாவட்டம், கடையம் அருகே பள்ளி ஆசிரியை வீட்டின் பின்பக்கக் கதவு, மற்றும் பீரோவை உடைத்து 21 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தட்டான்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜேசு ஆசீர். இவர் சென்னையில் சாப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெனிட்டா புளோரா (வயது 32), இவர் அம்பை அரசு மகளிர் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

கணவர் ஜேசு ஆசீர் சென்னையில் பணிபுரிந்து வருவதால் ஜெனிட்டா புளோரா நெல்லை மாவட் டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பெற்றோர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். குழந்தைகளும் அம்பையில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

நான் கடந்த நவ 14ம்தேதி ஜெனிட்டா தனது பிறந்த நாளை முன்னிட்டு தட்டான்பட்டியில் வீட்டிற்கு வந் துவிட்டு மீண்டும் தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருக்கார்த்திகை யைமுன்னிட்டு தட்டான்பட்டியில் உள்ள வீட்டிற்கு ஜெனிட்டா வந்தபோது, ​​வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார். மேலும் பீரோவில் இருந்து 50 பவுன் நகைத் திருடு போனது தெரியவந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததையும் பார்த்து

இதுகுறித்து ஜெனிட்டா ஆழ்வார்குறிச்சி போலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு பீரோவில் இருந்து 50 பவுன் நகைத் திருடு போனதாக கருதப்பட்ட நிலையில் 29 நகையை ஜேசுஆசீர் தனியாக எடுத்து சமையல்றையில் ஒரு இடத்தில் வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் பீரோவில் இருந்த 21 பவுன் நகை மட்டும் திருடு போனது.என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைதொடர்ந்து போலீசார் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசி டிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன நகைகளின் மதிப்பு சுமார் 21 லட்சம் என கூறப்படுகிறது.

ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் தலை மையிலும், ஆழ்வார் குறிச்சி இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்மநபர்களை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடய அறிவியலாளர்கள் கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். மோப்பநாய் பரணி வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட் டது.

வீட்டில் ஆட்கள் இல் லாததை நோட்டமிட்டு இந்த துணிகர திருட்டு சம்பவத்தில் மர்ம ஆசாமிகள் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவம் அப் குதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *