எல்லா மாநிலத்திலும் ஒரே விகிதத்தில் தொகுதிகள் அதிகரிப்பு- மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
1 min read
Increase in constituencies at a uniform rate across all states – decision taken at Cabinet meeting
27.11.2026
வருகிற 30ம் தேதி நடைபெற இருக்கும் சிறப்பு பார்லி கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. இதில், தொகுதி மறுவரையறை மசோதாவில் முக்கிய மாற்றங்கள் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் தொகுதிகள் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி அதிகரிப்பு இல்லை என்று முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, திருத்தங்களுடன் கூடிய மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது; மசோதாக்கள், பிற அரசு அலுவல்கள் குறித்த விவாதங்களில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், எம்பிக்களும் பங்கேற்க வேண்டும். அரசின் முடிவுகளை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ எம்பிக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. அவை நடவடிக்கைகள் சுமுகமாகவும், பயனுள்ளதாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. உலகமே நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. எனவே இந்த பார்லி சிறப்புக் கூட்டத்தொடரை மிகுந்த பொறுப்புணர்வுடன் நடத்துவது நமது கடமையாகும்,
இவ்வாறு கூறினார்.