அன்பில் மகேசுக்கு எதிரான வழக்கில் நீதிபதி அருள் முருகன் விலகல்
1 min read
Judge Arul Murugan recuses himself from the case against Anbil Mahesh
27.11.2026
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் அளிக்க ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மகேஷூக்கு எதிரான இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். செல்வாக்குள்ள அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்புடைய இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரிப்பது சரியாக இருக்காது என்று முறையிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி அருள்முருகன் தெரிவித்தார். இந்த வழக்கை உரிய அமர்வு முன்பு மாற்றுவது குறித்து நிர்வாக ரீதியிலான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தலைமை நீதிபதி கூறினார். இதனால், வேறு அமர்வில் இந்த வழக்கு பட்டியலிடப்பட இருக்கிறது.