June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Five resolutions passed in the DMK MPs meeting

8/5/2024
சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தமிழகத்தின் திட்டங்கள் , உரிமைகளுக்கு தொடர்ந்து அயராது குரல் கொடுப்போம் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தின் திட்டங்கள்,உரிமைகளுக்கு தொடர்ந்து அயராது குரல் கொடுப்பது.
ஜூன் 14 ல் கோவையில் முப்பெரும் விழா நடத்தப்படும்.

நிதி உரிமை மற்றும் மொழி உரிமை குறித்து பார்லி.யில் திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்புவோம்.
பார்லிமென்ட் வளாகத்தில் அகற்றப்பட்ட தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி. நீட் தேர்வு வேண்டாம் என கூறும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் ஆகிய ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.