Tenkasi District Police News
29.2.2024
தென்காசி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற குற்ற சம்பவங்களும் மாவட்ட காவல்துறையின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:-
இரும்பு பைப்புகளை திருடிய நபர் கைது.
தென்காசி மாவட்டம். ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிகுளத்தில் பெரியசாமி என்பவரின் தோட்டத்தில் மாட்டுத் தொழுவம் அமைப்பதற்கு இரும்பு பைப்புகளை தோட்டத்தில் வைத்திருந்த நிலையில் அதை அடையாளம் தெரியாத யாரோ திருடி சென்றதாக தோட்டத்தின் காவலாளியாக வேலை பார்த்து வரும் நாராயணன் என்பவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் தேவி விசாரணை மேற்கொண்டு மேற்படி இரும்பு பைப்புகளை திருடிய செட்டிகுளம் ஏழாவது தெருவை சேர்ந்த லூர்துசாமி என்பவரின் மகன் அற்புதராஜ் (வயது 37) என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார். மேலும் திருடப்பட்ட 5500/- ரூபாய் மதிப்பிலான இரும்பு பைப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்தவர் சிறையில் அடைப்பு
தென்காசி, மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் பெண் ஒருவர் அவருக்கு சொந்தமாக வீடு கட்டி வருவதாகவும், இந்நிலையில் வீடு கட்டுவதற்கு கொத்தனார் வேலை செய்யவந்த கார்த்திக் குமார் என்ற நபர் தன்னை பின்பக்கத்தில் வந்து தவறாக நடக்க முயற்சி செய்ததாக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் தேவிப்பிரியா விசாரணை மேற்கொண்டு மேற்படி பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த சாம்பவர்வடகரையை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் கார்த்திக் குமார் (வயது 39) என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 17 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர்.