June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய பட்ஜெட்: எந்தெந்த பொருட்கள் விலை கூடும், எவையெல்லாம் குறையும்?

Union Budget: Which items will increase in price and which will decrease? Full details

1.2.2025
2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். ஒரு மணி நேரம் 14 நிமிடம் பட்ஜெட் உரையாற்றிய நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல சிலவற்றிற்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, எந்தெந்த பொருட்களின் விலை குறையும்..எதெல்லாம் விலை கூடும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
விலை குறையும் பொருட்கள்:

  • 37 க்கும் அதிகமான மருந்துகளின் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அந்த மருந்துகளின் விலை குறைய உள்ளது. அதேபோல் புற்றுநோய், அரிய பிற நோய்களுக்கான 36 மருந்துகளுக்கும் அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதால் அதன் விலையும் குறைய உள்ளது.

*எல்.இ.டி,/எல்.சி.டி டிவிக்கள்

  • பதப்படுத்தப்பட்ட மீன்கள்

*லெதர் ஷூக்கள், லெதர் ஜாக்கெட்டுகள்

*கடல் பொருட்கள்