கவர்ச்சியில் எல்லை மீற மாட்டேன் – ராஷி கண்ணா
1 min read
28.2.2020
சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் ஓரளவு பெயர் கிடைக்கும் வரை எந்தவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருப்பார்கள். கவர்ச்சி, படுக்கையறை காட்சிகள் என அத்தனையிலும் புகுந்து விளையாடும் நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்ந்த பிறகு அது எல்லாம் தவறு என்று கூறுவது தான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. இவருக்கு இரண்டு மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் ராசி கண்ணா நடிப்பில் வெளிவந்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படம் மண்ணைக் கவ்வியது. அதற்கு இயக்குனரிடம் விஜய் தேவர கொண்டா சண்டை போட்டதுதான் காரணம் எனவும் பல காரணங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஷி கண்ணா, இனி எல்லை மீறிய கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் எனவும், தற்போது ஓரளவு அறியப்படும் நடிகையாக மாறிவிட்டதால் இனி அதுபோன்ற காட்சிகளிலும் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஆனால் வேர்ல்டு பேமஸ் லவ்வர் திரைப்படத்தில் ராஷி கண்ணா நிர்வாணமாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஷி கண்ணாவின் இந்த கருத்துக்களை கேட்ட ரசிகர்கள் அந்த காட்சிகளில் உள்ள புகைப்படத்தை அனுப்பி அவரை கலாய்த்து வருகின்றனர்.
முன்னேறுவதற்கு முன் எப்படி வேணாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனவும் முன்னேறிய பிறகு ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்போல் அமைந்துள்ளது ராசி கண்ணாவின் கருத்து.