பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஸ்ருதிஹாசன்
1 min read28.2.2020
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம், தெலுங்கில் ரவிதேஜாவுடன் கிராக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் தானா என்று கேட்கும் அளவுக்கு மாறியிருக்கிறார்.
மிகவும் ஒல்லியாகவும் சோகமாக இருக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், என்னாச்சு உங்களுக்கு ஏன் இப்படி பரிதாபமாக இருக்கீங்க நல்லா சாப்பிட்டு உடம்பை தேற்றுங்க என்று ரசிகர்கள் ஆறுதல் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
இதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு என்னாச்சு நோயாளி மாறி ஆகிவிட்டாங்களே என்று அடுத்தடுத்து பதிவு போட ஆரம்பித்துவிட்டார்கள். இதை பார்த்த பலரும் ஸ்ருதிக்கு
எனனாச்சு என்ற ரீதியில் விசாரிக்க தொடங்கினார்கள்.
இதனால் அவர் பதில் அளித்துள்ளார். என்னை பற்றி மற்றவர்கள் என்ன் சொல்கிறார்கள் என்பதை பற்றி கவனத்தில் கொள்பவள் அல்ல. இருந்தாலும் இதை சொல்கிறேன். குண்டாக இருக்கிறாள், ஒல்லியாக இருக்கிறாள் என்பதை தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு புகைப்படங்களும் மூன்று நாட்கள் இடைவெளியில் எடுத்தது.
நான் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் என் ஹார்மோன்களின் கருணையுடன் நன்றாகவே உள்ளேன். உடல் மாற்றங்கள் எளிதானதல்ல. புகழ்பெற்றவராக இருந்தாலும் இல்லை என்றாலும் மற்றவர் பற்றித் தீர்ப்பளிப்பது சரியல்ல.
இது என் முகம், என் வாழ்க்கை என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆமாம், நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அதைச் சொல்ல எனக்கு வெட்கமில்லை என்று தெரிவித்துள்ளார்.