May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

சகுனத்தடை மூட நம்பிக்கையா? இதோ விளக்கம்

1 min read
Seithi Saral featured Image
Is it okay to look sagunam?

வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கால் இடறினாலோ, வாயிற்படியில் தலையில் இடித்துக் கொண்டாலோ, நடையில் தடுமாற்றம் உண்டானாலோ அதனை சகுனத் தடையாகச் சொல்வார்கள். இதுபோன்ற சகுனங்களை மூடநம்பிக்கை என்று ஒதுக்க முடியாது.

உண்மை நிலையை யோசித்துப் பாருங்கள். வெளியே ஒரு வேலையாக செல்லும்பொழுது கால் இடறுவது, தலையில் இடித்துக் கொள்வது, நடையில் தடுமாற்றம் முதலான நிகழ்வுகள் வெளியில் செல்பவரது கவனக்குறைவால்தான் நிகழ்கிறது. அதே கவனக்குறைவுடன் இருந்தால் அவரால் அந்த வேலையை சரிவர செய்ய இயலாது. கவனக் குறைவினை சரி செய்வதற்காகவும், மனதளவில் அவர் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் வீட்டிற்குள் திரும்ப அழைத்து அமரச் செய்து நீரை அருந்துங்கள் என்கிறார்கள். குடிக்கின்ற நீர் மனதை சாந்தப்படுத்தும். தண்ணீர் என்பது கிரஹங்களில் சந்திரனின் ஆதிக்கத்தைப் பெற்றது.

அந்தச் சந்திரனையே மனோகாரகன் என்று அழைப்பார்கள். ‘ஔஷதீனாம் அதிபதி:’ என்று சோமனைச் சுட்டிக் காட்டுகிறது வேதம். ஔஷதி என்றால் மருந்து. மருந்துகளுக்கெல்லாம் அதிபதி சோமன். அந்த சோமனின் பிரசாதமான தண்ணீரைப் பருகிவிட்டுச் செல்லும்போது நம் உடம்பில் உள்ள குறைகள் காணாமல் போகின்றன. தண்ணீரை அருந்திவிட்டு வெளியில் கிளம்பும்பொழுது மனமும் சாந்தமாய் இருக்கிறது. வெளியில் சென்று செய்துமுடிக்க வேண்டிய பணியும் வெற்றி பெறுகிறது.

சகுனத்தடைகள் உண்டாகும்போதுதான் உள்ளே வந்து அமர்ந்து நீர் அருந்திச் செல்ல வேண்டும் என்பதில்லை, வெளியில் வேலையாகக் கிளம்பும்போதே மனைவியின் கையாலோ, மகளின் கையாலோ, தாயாரின் கையாலோ அல்லது அந்த வீட்டில் உள்ள பெண்களின் கையாலோ ஒரு சொம்பு தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு கிளம்பிப் பாருங்கள். இதுபோன்ற சகுனத் தடையும் உண்டாகாது, கையிலெடுத்த செயலையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.