June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற வாலிபர்

1 min read

leady murder by her husband

18/3/2020

திருப்பரங்குன்றம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தகராறு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டி ரோஜா தெருவைச் சேர்ந்தவர் அசோக்(வயது32). இவரது மனைவி சுதா(27).
இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

அசோக் குமாருக்கு குடிப்பழக்கம் உண்டு. வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் அவர்கள் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு.
நேற்று(செவ்வாய்க்கிழமை) அசோக் குமார் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

கொலை

இதில் ஆத்திரம் அடைந்த அசோக் குமார் தன்னுடைய மனைவி சுதாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து சுதாவின் தந்தை ராமகிருஷ்ணன் திருநகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவாக இருக்கும் அசோக்குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *