சாலையில் திரிபவர்களை ஒற்றைக்காலில் நிற்க வைத்தால் கொரோனா வராதா? போலீசார் நூதன பதில்
1 min read
Can Corona come if you can stand on the sidewalk? The cops reply
1/4/2020
சாலையில் சுற்றி திரிபவர்களை போலீசார் ஒற்றைக் காலில் நிற்க வைத்து தண்டனை கொடுக்கிறார்கள். அப்படி நின்றால் கொரோனா வரதா என்பதற்கு போலீசார் தக்க பதில் சொன்றாாகள்.
கொரோனா தண்டனை
இந்தியாவில் கொரோன பரவலை தடுக்க ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் சிலர் தடையை மீறி சாலையில் திரிகிறார்கள். அவர்களை போலீசார் பிடித்து தோப்புக் கரணம் போட வைக்கிறார்கள். சில போலீசார் அவர்களை ஒற்றை காலில் நிற்க வைத்து தண்டனை வழங்குகிறார்கள். இன்னும் சில போலீசார் அவர்களை மூச்சு இரைக்க ஓட வைக்கிறார்கள்.
சில போலீசார் தடியடி நடத்துகிறார்கள். இதுபற்றி சமூக வலைதளங்களில் கண்டனம் வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் அருகே சிக்கிய 3 பேரை தவளை போல தாவிச்சென்று தூரத்தில் நிற்கும் லாரியைத் தொடும் படி கூறி தண்டனை வழங்கப்பட்டது.
சென்னை, திருவொற்றியூரில் சிக்கிய வாலிபர்களை ஒற்றை காலில் நிற்க வைத்து அவர்களுக்கு கொரோனா நோய் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.
கொரோனா வராது
அப்போது ஒற்றைக்கால் தவம் செய்த வாலிபர் ஒருவர், “சார், ஒத்தக் காலில் நின்றால் கொரோனா வராதா ?” என்று கிண்டலாக முணுமுணுத்தார். இது போலீசாரின் காதுக்கு எட்டிவிட்டது. அந்த போலீசார் அவனை கண்டிக்கவில்லை. பதிலுக்கு அந்த வாலிபருக்கு தக்க பதில் அளித்தனர்.
“ஒத்தக் காலில் நின்றால் நிச்சயம் கொரோனா வராது. ஏனென்றால் இப்படி நின்கும்போது காலில் வலி வரும். அதனால் வீட்டிலேயே இருப்பாய். வீட்டிலேயே இருந்தால் கொரோனா வராது” என்றனர். தண்டனைக்குப் பிறகு அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அதே போல சென்னை பூந்தமல்லி அடுத்த குமணன் சாவடி பகுதியில் வீதியில் வீணாக சுற்றியதால் காவல்துறையினரிடம் சிக்கிய வாலிபர்களின் இரு சக்கர வாகன சாவிகள் பறிபோயின.
அவர்களை, கொளுத்தும் வெயிலில் சிறிது தூரம் ஓடிவிட்டு வந்து சாவியை வாங்கிச்செல்ல அறிவுறுத்தினர்.
மூச்சிரைக்க ஓடித் திரும்பிய வாலிபர்கள் இனி வெளியே வர மாட்டோம் என்று வாகனத்துடன் ஓட்டம் எடுத்தனர்.
கொடுங்கையூரில் வெட்டியாக வேலையின்றி ஊர் சுற்றிய நபர்களை பிடித்து இனிமேல் ஊர்சுற்ற மாட்டோம் என்று கோரஸ் மத்திரத்துடன் தோப்புக்கரணமும் போட வைத்தனர்.
பிச்சை எடுக்க வைத்தனர்
செங்குன்றம் போலீசார் சற்று வித்தியாசமாக சாலையில் சுற்றிய நபர்களை, அப்படியே பிச்சைக்காரர்கள் போல சாலையில் அமரவைத்தனர்.
கையில் திருவோட்டுக்கு பதில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்த வைத்தனர்.
சமூக இடைவெளியை உணர்த்தும் விதமாக, அமரவைக்கப்பட்ட அந்த ஊர்சுற்றிகளின் புத்திக்கு உரைக்கும் வகையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர்.
கையில் தடியை எடுக்காமல் போலீசார் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியை மிஞ்சும் வகையில் தண்டனை கொடுக்கிறார்கள் என்று சிலர் கிண்டலாக சொல்லிச் சென்றனர்.
ஆனாலும் போலீசாரின் இந்த தண்டனைக்கு அத்தியாவசிய பணிக்கு செல்வோர் சிலரும் உட்படுத்தப்படுகிறார்கள் என்பது உண்மையே.