சென்கையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு சரக்கு ரெயில் இயக்கம்
1 min read
Chennai to Delhi Goods train ran yesterday
2/4/2020
சென்னையிலிருந்து மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் சிறப்பு சரக்கு ரயில்கள் நேற்று இயக்கப்பட்டன.
சரக்கு ரெயில்
கொரோ தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல சிறப்பு ரெயில் நேற்று இயக்கப்பட்டது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள இது குறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
2,600 கிலோ
சரக்கு ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் இருந்து நேற்று(வியாழக்கிழமை) டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
5 வேகன்களில் 2,600 கிலோ அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்லப்பட்டது. வழியில் உள்ள ஸ்டேஷன்களில் பொருட்கள் ஏற்றப்பட்டது.
இரண்டாவது பார்சல் விரைவு ரெயில் யஸ்வந்த்பூர் ஜங்ஷனிலிருந்து ஹவுரா வரை இயக்கப்பட்டது.
இதில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து 5 வேகன்களில் 10,740 கிலோ அத்தியாவசிய பொருட்கள் ஏற்றப்பட்டன.
மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் முகக்கவசம், உணவு வகைகள், உணவு தயாரிப்புகள், காகிதம் உள்ளிட்ட எழுது பொருட்கள், கூரியர்கள் மற்றும் இந்த நேரத்தில் தேவைப்படும் முக்கிய மருத்துவப்பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.