May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

ஊரடங்கை உதாசீனப்படுத்தும் மக்கள்

1 min read
Seithi Saral featured Image

Some people do not follow the curfew

சீனாவை சின்னாபின்னமாக்கிய கொரோனா இந்தியாவுக்குள்ளும் புகுந்து இடர் இழைத்து வருகிறது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டாலும் மற்ற நாடுகளை அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளை ஒப்பிடும்போத சாவு எண்ணிக்கை குறைவுதான். ஆனாலும் அதன் பரவல் பலரையும் அச்சுறுத்தி வருகிறது.
இதற்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் தனிமை படுத்துதல்தான் நோய் பரவலை கட்டுப்படுத்தும். இதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் ஒவ்வொருவரும் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் இந்த ஊரடங்கால் முழு பலனை பெற முடியாது.
உண்மையில் தனித்திருத்தல் என்பது பல்வேறு தரப்பினரால் மீறப்படுகிறது. பாமர மக்களில் இருந்து அதிகாரிகள் தரப்பி வரை இதை முறைபடி கடை பிடிப்பது கிடையாது. பாமர மக்களை பொறுத்தவரை கடைகளுக்கு நெருக்கடியில் நின்று பொருட்கள் வாங்குகிறார்கள். காரணம் இல்லாமல் வெளியில் சுற்றுகிறார்கள். சில அரசியல் கட்சியினர் மற்றும் சமூக நலத் அமைப்பினர் பொதுமக்களுக்கு பொதுமக்களுக்கு உதவி செய்கிறேன் என்று கூறிக்கொண்டு பலர் திரண்டு நிற்பது வேதனை அளிக்கிறது.
அதிகாரிகள் சிலரும் இதனை முறைப்படி கடைபிடிப்பது கிடையாது. சில அதிகாரிகள் கூட்டமாக நின்று பணியாற்றுவது டெலிவிஷனில் தெரிகிறது. இடைவெளிவிட்டு விலகி நிற்றலை அவர்கள் பின்பற்றுவது கிடையாது.
தற்போது பத்திரிகையாளர்கள் பலர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கிட்டத்தட்ட 30 பேருக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கூட அதை பரிதாப உணர்வோடு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பத்திரிகையாளர்களுக்கு வந்திருப்பதற்கு கவனக்குறைதான் காரணம். இதற்கு பல பத்திரிகை அலுவலகம் தாங்கள் எந்த நிருபர்களையும் போட்டோ கிராபர்களையும் நேரடியாக பணிக்கு அனுப்பவில்லை என்றும் வீட்டில் இருந்து போன், வாட்ஸ்&அப் மூலம் செய்தி சேகரிக்கும்படி கூறியுள்ளோம் என்று கூறியுள்ளது.
உண்மைதான் தற்போது உள்ள நவீனம் மூலம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்லாமல் எளிதில் செய்திகளை சேகரித்துக் கொள்ளலாம். பேட்டி, செய்திகளை சம்பந்தப்பட்ட மந்திரிகள், அதிகாரிகள் அந்தந்த பத்திரிகைக்கு மெயில் மூலம் அனுப்வி விடலாம். முக்கிய பேட்டியைக்கூட வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தலாம். எனவே பத்திரிகையாளர்களும், அதிகாரிகளும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
மருத்துவ மனையில் பணியாற்றும் டாக்டர்கள் உள்பட அனைவருக்கும் அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவர்கள்தான் தியாக மனப்பான்மையில் பணியாற்றி வருகிறார்கள்.
பொதுமக்களை பொறுத்தவரை போலீசாருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வெளியே வருவதை தடுக்க வேண்டும். மனிதாபிமானத்துடன் பிறருக்கு உதவ வேண்டும்.
இந்த கொடூர நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிக்சை அளித்த மருத்துவர்கள் பலர் உயிர் இழந்தது வேதனையிலும் வேதனை. தமிழகத்தில் இறந்த டாக்டரின் உடலை தகனம் செய்வதற்கும் இன்னொரு டாக்டரின் உடலை புதைப்பதற்கும் பெரும் இடையூறுகளை சந்திக்க நேர்ந்தது கொரோனாவை விட பெரும் கொடூரம். அங்கே மக்களின் மனிதாபிமானம் செத்துவிட்டது என்றே கூற வேண்டியது இருக்கிறது. இந்த விசயத்தில் அதிகாரிகள் இறந்த டாக்டர்களின் உடல்களை உரிய மரியாதையுடன் (பாதுகாப்புடன்) எரியூட்டி இருக்க வேண்டும். காரணம் அந்த மருத்துவர்களால் எத்தனையோ பேர் உயிர் பிழைத்திருப்பார்கள். மேலும் டாக்டர்களின் உடலை தகுந்த இடத்தில் அடக்கமோ அல்லது எரியூட்டவோ எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னும் சில இடங்களில் கொரோனா சந்தேகத்தின் பேரில் சிலரை தனிமை படுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்களை தங்கள் பகுதியில் தங்க வைக்ககூடாது என்று பொதுமக்கள் போராட்டம் நடத்துவதும் வேதனை. கொரோனா பரவாமல் இருக்க தனிமை, ஒதுங்கி இருத்தல் அவசியம். அதற்கான யாரையும் புறக்கணிக்கக்கூடாது. இதில் அதிகாரிகளும் பாதுகாப்பான ஊரில் இருந்த ஒதுங்கி இருக்கும் கல்லூரியை தேர்ந்து எடுத்து அதை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்.
கொரோனா பரவல் இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை. அதுவரை பொதுமக்கள் உள்பட அனைவரும் கவனமுடனும் ஒத்துழைப்புடனும் இருக்க வேண்டும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.