கொரோனா அறிகுறியை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் கருவி; சென்னை ஐ.ஐ.டி. சாதனை
1 min read
Instrument for detecting coronal symptoms; IIT Chennai Detection
19-5-2020
கொரோனா அறிகுறியை முன்கூட்டியே கண்டு பிடிக்கும் கருவியை சென்னை் ஐ.ஐ.டி. கண்டு பிடித்துள்ளது. கையில் வாட்ச் போல் இதனை கட்டிக்கொண்டால் போதும். அடுத்த மாதம் சந்தைக்கு வரும் இந்த கருவி விலை ரூ-3500 தான்.
கருவி
பொதுவாக நோய் வந்தபின்னர் சிகிச்சை பெறுவதைவிட முன்கூட்டியே கண்டறிந்தால் பாதுகாப்பு சிகிச்சை அளிப்பது எளிது. தற்போது கொரோனா என்ற கொடூர நோய்க்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் அதன் அறிகுறியை மன்கூட்டியே கண்டறிந்தவிட்டால் அதை எளிதில் குணப்படுத்தி விடலாம்.
அந்த வகையில் கொரோனா அறிகுறியை முன்கூட்டியே கண்டறியும் கருவியை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்து உள்ளது.
தோல் வெப்பநிலை, இருதய துடிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக கண்காணித்து, அதன் அடிப்படையில் கொரோனாவுக்கான அறிகுறியை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டு உள்ளது. லான நவீன தொழில்நுட்ப கருவியை சென்னை
வாட்ச் போல்…
இந்த கருவியை கைகளின் மணிக்கட்டில் வாட்ச் போல் கட்ட வேண்டும்.
இந்த கருவி ‘மியூஸ் ஹெல்த் அப்’ என்ற செயலியின் (அப்ளிகேஷன்) உதவியோடு இது செல்போனில் இயங்கும். ‘புளூடூத்’ உதவியோடு செயல்படும். தோல் வெப்பநிலை, இருதய துடிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு ஆகியவற்றின் தகவல் சேமிக்கப்படுவதோடு, சர்வரிலும் சேமிக்கப்படும். நிர்வாக செயல்பாடுகளுக்காக கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்களை ஒருங்கிணைந்த முறையிலும் கண்காணிக்க முடியும். மேலும் ஆரோக்கிய சேது செயலியின் அறிவிப்புகளையும் பெற முடியும். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் சென்றால், பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும். புது தொழில்நுட்ப கருவியின் வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்து விட்டன. முதல் கட்டமாக கொரோனா அறிகுறியை முன்கூட்டியே தெரிவிக்கும் நவீன கருவிகள் ஜூன் மாத இறுதிக்குள் சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வசதிகள்
கொரோனா அறிகுறியை முன்கூட்டியே தெரிவிக்கும் கருவியில் உள்ள வசதிகள் வருமாறு:-
- அனைத்து சமயங்களிலும் அணிவதற்கு சவுகரியமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- டாக்டர்கள் தொலைதூரத்தில் இருந்தவாறு நோயாளிகளின் உயிரணுக்களை கண்காணிக்க முடியும்.
- எத்தனை அடி நடந்து சென்றிருக்கிறார்கள்?. கலோரி அளவு, நடந்த தூரம் உள்ளிட்டவற்றையும் கண்காணிக்க முடியும்.
- பயன்படுத்துபவர்களின் உயிரணுக்கள் ஆபத்தான நிலைக்கு சென்றால் உடனடியாக அவசர மீட்பு முறைக்கு தானாகவே எச்சரிக்கை விடுக்கும்.
- தூங்கும் நேரத்தை தானாகவே கண்காணிக்கும்.
- ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 4 வாரங்கள் வரை சார்ஜ் இறங்காது. நீடித்து உழைக்கும் பேட்டரிகள் உள்ளன.
- உடல் வெப்பநிலை அதிகரித்தாலோ, ஏதாவது சிக்கல்களை சந்தித்தாலோ பயனாளிகள் அவசர எச்சரிக்கை விடுக்கலாம்.
- ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு குறையும்போதும், பயனாளிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழையும்போதும் இந்த கருவி தானாகவே எச்சரிக்கை விடுக்கும்.
3500 ரூபாய்
- இந்த நவீன கருவிக்கு சுமார் ரூ.3,500 விலையாக நிர்ணயிக்கப்பட உள்ளது. நுகர்வோர் பயன்பாட்டுக்காக 70 நாடுகளில் இந்த கருவி விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.