தேவர்மகன் 2-ம் பாகத்தில் கமலுடன் 3 கதாநாயகிகள்
1 min read
3 heroines with Kamal in Devar magan part 2
21-5-2020
தேவர்மகன் படத்தின் 2-ம் பாகம் தலைவன் என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. இதில் கமல்ஹாசனுடன் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
தேவர் மகன்
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தனது இறுதி காலத்தில் நடித்த படங்களில் முக்கியமானது தேவர்மகன். இந்த படத்தில் அவர் பாதிஅளவுதான் வந்தாலும் அவருக்கு இணையாக யாரும் அந்த கிராமத்து பாணியில் பேசி நடிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
அந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் ரேவதி, கவுதமி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகமாக தலைவன் இருக்கின்றான் என்ற பெயரில் புதிய படம் தயாரிக்கப் போவதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கமல் அறிவித்து இருந்தார். அதன்பின் தயாரிப்பு பணி கிடப்பில் போடப்பட்டது.
3 கதாநாயகிகள்
தற்போது அந்த படத்தை கமல் மீண்டும் தொடங்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். வடிவேலு நீண்ட நாட்களுக்கு பின் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் உள்ளனர். தேவர் மகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ரேவதி இப்படத்திலும் நடிப்பார் என்று தெரிகிறது. மேலும் ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோரும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே கமலின் விஸ்வரூபம், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.