June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

ஊரடங்கு காலத்தில் ஆஸ்பத்திரிக்கு வந்து சென்ற அஜித்

1 min read


Ajith came to the hospital during the curfew

22-5-2020
ஊரடங்கு காலத்தில் நடிகர் அஜித் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் வீடியோ வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அஜித்

நடிகர் அஜித் தற்போது வலிமை என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை வினோத் இயக்குகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வலிமை படப்பிடிப்பு நடைபெறவில்லை.
இந்த நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய மனைவி சாலினியுடன் ஒரு ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டு வெளியேறும் வீடியோ காட்சி வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் நம்ம தலை ஏன் ஆஸ்பத்திரிக்கு வந்தார் என்று குழமபி போனார்கள்.

தந்தை

இதுபற்றி விசாரித்தபோது , அவரது அப்பா கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாலேயே அஜித் தன் மனைவியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.

அந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டிருப்பதும் தெரிய வந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *