June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தொழில் தர்மம் – சிறுகதை – முத்துமணி

1 min read

thozhil dharmam – Short story By Muthumani

22-5-2020

“என்னங்க இவ்வளவு நேரம் ஆயிடுச்சு வீட்டுக்கு வர… இன்னைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நிகழ்ச்சி இருக்குன்னு சொன்னீங்களே ‘எத்தனை மணிக்கு ப் புறப்படணும்?” என்று அவள் கேட்டாள்.
“நீ சூடா ஒரு டீ போடு லேசா குளிச்சிட்டு வந்துடறேன். என் பட்டிமன்ற பையை எடுத்து வை. மறக்காமல் அந்த மெருன் கலர் துண்டை எடுத்து வை” என்றேன்.

“எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன் இன்னைக்கு தனிச் சொற்பொழிவு தானே?”என்றாள்.
“ஆமா நேரமாகிவிட்டது கொஞ்சம் பள்ளியில் வேலை. 15 நிமிடத்தில் கிளம்பினால் பஸ்ஸைப் பிடித்துச் சரியான நேரத்திற்குப் சிசிபோய்விடலாம்.”என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் புகுந்து கடகடவென்று குளித்துவிட்டு வெளியில் வந்து கண்ணாடி முன் நின்று தலை சீவிக் கொண்டு மணியைப் பார்த்தேன். 6.25 காட்டியது.
சரியாக ஏழு மணிக்கு மீட்டிங் என்று சொன்னாங்க லயன்ஸ் கிளப் மீட்டிங் ‘தொழில் தர்மம் ‘அப்படின்னு ஒரு தலைப்பு. நம்மி டம் ஒரு தொழில் தர்மம் இருக்க வேண்டுமல்லவா? சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும். செல்ஃபை திறந்தேன்.

“ஜானகி அந்த ப்ளூ கலர் பார்டர் வேஷ்டியை எங்கே?”

“ஓ! அதுவா இரண்டு நாட்களுக்கு முன்தான் அதை கட்டிக் கொண்டு சென்றீர்கள் அது அழுக்கா இருக்கு. துவைக்க ப்போட்டிருக் கேன். லயன்ஸ் கிளப் மீட்டிங்தானே ஒரு மணி நேரம் நின்று கொண்டு தானே பேச வேண்டும் நல்ல பேண்ட் சர்ட் போட்டுக் கொண்டால் போதாது” என்று கேட்டாள்.
“ஆமாம் அதுதான் சரி இனி மேல் வேஷ்டியை க கட்டிக்கொண்டு லேட் ஆகிடும் மேகமூட்டமாக இருக்கிறது மழை கூட வரலாம்” என்று சொல்லிக்கொண்டு சில நிமிடங்களில் தயாராகி விட்டேன்.

மூன்று நிமிட நடை .போலீஸ் காலனி பஸ் ஸ்டாப் வந்து விட்டேன். பஸ் ஏறினால் பதினைந்து நிமிடம் தான். ஸ்ரீவில்லிபுத்தூர் போய்விடலாம். அங்கு சர்ச் ஸ்டாப்பில் இறங்கினால் அவர்களே காரில் வந்து கூட்டிச் செல்வார்கள் என்று நினைத்த போது பஸ் வந்தது. கையை நீட்டினேன்.
நிறுத்தாமல் சென்றுவிட்டது. பஸ் முழுக்க நிரம்பி வழிந்தது அவ்வளவு கூட்டம் அதனால்தான் நிறுத்தவில்லை. ஆனாலும் நிறுத்தியிருக்கலாம் ஒரு ஆளை ஏற்றிக் கொண்டு போனால் என்ன? அதுதானே அவனுக்கு வேலை? என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே வாட்சைப் பார்த்தேன் 6.40. இன்னும் இருபது நிமிடம் தான் இருக்கிறது. அதோ அடுத்து ஒரு வண்டி வருகிறது. கையை நீட்டினேன் அதிலும் கூட்டம் டிரைவர் கையை வெளியே நீட்டி டாட்டா காட்டி விட்டு சென்று விட்டார்.
‘ஏண்டா உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா? தொழில் தர்மம் என்று ஒன்று இருக்கிறது .அது ஏண்டா எவனுக்கும் தெரியவில்லை?.நிறுத்தாமல் போகிறாயே!’ என்று நினைக்கும் போது கெட்ட வார்த்தை ஒன்றும் தொண்டைவரை வந்து சென்றது.
படபடப்பு தொற்றிக் கொண்டது. பஸ் வருகிறதா என்று கிழக்கு நோக்கிப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
கழுத்துவலி ,அதற்குள் அலைபேசி அழைத்தது. எடுத்தேன் ஆகா, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் தான். “ஹலோ “என்றேன்
“சார் பஸ் ஸ்டாப் வந்துட்டீங்களா… வண்டியோடு காத்திருக்கிறோம் . மழை மேகமாக இருக்கிறது 7 மணிக்கு ஆரம்பித்து 7.45க்குள் முடிச்சிடலாம் ” என்று சொன்னார்.
“ஐந்து நிமிடத்தில் வந்து விடுவேன் சார் பஸ்ஸில் தான் இருக்கிறேன்” என்று தைரியமாகப் பொய் சொல்லவும் இன்னொரு பஸ் வரவும் சரியாக இருந்தது. கடவுளே இந்த பஸ் ஆவது நிறுத்தி என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். ஓடி நடுரோட்டுக்கு சென்று கையை நீட்டி மேலும் கீழுமாக ஆட்டினேன். பஸ் நின்றது அப்பா என்ற பெருமூச்சோடு பஸ்சுக்குள் முன் வழியாக ஏறினேன.
முழுக்க கூட்டம்தான். விசில் அடித்தவுடன் வண்டி புறப்பட்டது. கைக்கடிகாரத்தில் மணியை மணியை பார்த்தேன். டிரைவரை உற்றுநோக்கினேன். நல்ல மனிதர் நிறுத்தி ஏற்றிக்கொண்டு வந்தார்.இவர் நிற்கவில்லை என்றால் இன்றைக்கு நேரத்திற்கு மீட்டிங் சென்றிருக்க முடியாது என்று நினைத்து மனதிற்குள் அவரைப் பாராட்டினேன். தொழில் தர்மம் தெரிந்தவர்.எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் நிறுத்துவதும் பயணிகளை ஏற்றுவதும் இறக்குவதும் தானே அவர்கள் தொழில் அதை செய்ய வேண்டும் அல்லவா? வேகமாகச் சென்றார் என்றால் சரியான நேரத்திற்கு போய்விடலாம் என்று நினைத்தேன்.
பஸ் ரெயில்வே கேட் தாண்டி சாட்சியாபுரம் வந்தது. வேகமாக வந்துகொண்டிருந்த வண்டி ‘சடக் ‘என்று நின்றது. கண்ணாடி வழியாக பார்த்தேன் குடையோடு ஒருவர் வண்டிக்கு கை காட்டி க் கொண்டு இருந்தார். அவரை ஏற்றுவதற்காக தான் சடக்கென்று நிறுத்திஇருக்கிறார் டிரைவர்.

சற்றும் தாமதிக்காமல் என் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவைதான்.
“என்னங்கடா வண்டி ஓட்டுறீங்க?எடுத்தோமா’ போனோமா’ என்று இல்லாமல் ‘புளுக் புளுக்குண்ணு நிறுத்திகிட்டு? நல்ல டிரைவர் வந்து சேர்ந்தான்…விளக்கெண்ணெய்.”

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.