பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் மரணம்
1 min read
Actress Vanisree’s son died
23-5-2020
பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் திடீரென்று மரணம் அடைந்தார். அவர் டாக்டராக பணியாற்றி வந்தார்.
நடிகை வாணிஸ்ரீ
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் வசந்த மாளிகை, வாணிராணி, சிவகாமியின் செல்வன், உயர்ந்த மனிதன்., ரோஜாவின் ராஜா மற்றும் ஏராளமான தமிழ் படங்களில் நடித்தர் நடிகை வாணிஸ்ரீ.
காதாநாயகியாக நடித்து வந்த அவர் நடுத்தர வயதை தாண்டிய பின்னர் சில தெலுங்கு படங்கிளல் அம்மா வேடங்களில் நடித்தார். தற்போது நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் கடந்த ஆண்டு தெலுங்கு டெலிவிஷன் தொடரில் நடித்தார்.
நடிகை வாணிஸ்ரீயின் கணவர் கருணாகரன். இவர்களது மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக். டாக்டராக பணியாற்றி வந்தார். 36 வயதான இவர் நேற்று(வெள்ளிக்கிழமை) திடீர் மாரணமடைந்தார். அவர் திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அபினய வெங்கடேஷ கார்த்திக் செங்கல்பட்டு அருகில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கி இருந்தார். அவர் தூக்கத்தில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இன்று (சனிக்கிழமை ) காலை அவரை குடும்பத்தினர் எழுப்பியபோதுதான் அவர் இறந்தது தெரியவந்தது.
அபிநய வெங்கடேஷின் உடல் வாணிஸ்ரீயின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.
அபினய வெங்கடேஷ கார்த்திக் சென்னையில் உள்ள அன்னபூர்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான் மருத்துவ படிப்பை முடித்தார். அதன் பிறகு பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவரது மனைவியும் மருத்துவர் தான். இவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியையாக இருக்கிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
சொத்து பிரச்சினை
வாணிஸ்ரீக்கு அபினய வெங்கடேஷ கார்த்திக்கை தவிர இன்னொரு மகளும் உண்டு. அவரும் டாக்டர்தான். அவரது பெயர்அனுபமா. அவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் மகனுக்கு தந்தையும் மகளுக்கு தாய் வாணிஸ்ரீயும் ஆதரவாக இருந்தார்களாம். சொத்து பிரச்சினை காரணமாக அபினய வெங்கடேஷ கார்த்திக் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் அவருக்கு மாரடைப்பு வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை பேட்டி
வாணிஸ்ரீயின் கணவர் பெயர் கருணாகரன். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்தான். அதேபோல் இவர்களது மகனும் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
மகனின் இறப்பு குறித்து கருணாகரன் கூறியதாவது:-
எனது மகன் அபினய்க்கு விளையாட்டில்தான் குறிப்பாக கிரிக்கெட்டில்தான் அதிக விருப்பம். அவன் மருத்துவம் படிக்கத் தேர்ந்தெடுத்தபோதுகூட ஸ்போர்ட்ஸ் மெடிசின் தான் எடுத்துப் படித்தான்.
எங்க குடும்பத்துக்கு என்ன சாபக்கேடோ தெரியல. எனக்கு 5 வயசா இருந்தபோது என்னுடைய அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்தார். என்னுடைய அண்ணன் ஒருத்தரும் 40 வயாதிலேயே மாரடைப்பால் இறந்தார். இப்போது என் ஒரே மகனும் அதே ஹார்ட் அட்டாக்ல போயிட்டான். என்ன சொல்றதுன்னே தெரியலை.
இவ்வாறு கண்மல்க கூறினார்.