June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

அடுத்த மாதம் இந்தியாவில் கொரோனா உச்சத்தை தொடும்-ஆய்வுக் குழு தகவல்

1 min read
Seithi Saral featured Image

Corona peaks in India next month

23-5-2020

இந்தியாவில் அடுத்த மாதம் இறுதி வாரத்தில் கொரோனா உச்சத்தைத் தொடும் என்று ஆய்வுக் குழு தெரிவித்து உள்ளது.

ஆய்பு குழு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மேற்கு வங்காள மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நந்ததுலால் பைராகி தலைமையிலான 6 பேர் குழு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் கொரோனா பற்றிய பல்வேறு கணிப்புகளை அவர்கள் வெளியிடடனர்.

அதில் உள்ள சில முக்கிய தகவல்கள் வருமாறு:-

அடுத்த மாதம்

அடுத்த மாதம்(ஜூன்) 21-ந் தேதியில் இருந்து 28-ந் தேதி வரையிலான கால கட்டத்தில் கொரோனா பரவல், இந்தியாவில் உச்சம் தொடும். தினமும் 7,000 முதல் 7,500 பேர் வரையில் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்.

ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்துதான் தொற்று ஒவ்வொரு நாளும் குறையும்.

அக்டோபர் முதல் வாரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தொடும்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியும் அறிகுறி இல்லாதவர்களால் 2 முதல் 3 பேருக்கு பரவும் அபாயம் இருப்பதால்தான் இந்தளவுக்கு பாதிப்பு அதிகரிக்கும்.

இந்தியாவில் தடுப்பூசியும், மருந்தும் இல்லாத நிலையில் ஊரடங்கை தொடர வேண்டும். நபருக்கு நபர் பரவுவதைத் தடுக்க இதை செய்ய வேண்டும். தொடர்பு கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக பொது போக்குவரத்து சாதனங்களை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *