“பொன்மகள் வந்தாள்” படம் 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியீடு; ஜோதிகாவுக்கு ராதிகா பாராட்டு
1 min read
“Ponnamu Vandal” movie released on Amazon Prime on 29th; Radhika praises Jodhika
“பொன்மகள் வந்தாள்” படம் 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியீடு; ஜோதிகாவுக்கு ராதிகா பாராட்டு
2-5-2020
நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படம் வருகிற 29-ந் தேதி ஜோதிகா அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்படுகிறது. இது தொடர்பான ஜோதிகாவின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ராதிகா பாராட்டு தெரிவித்து உள்ளார்.
பொன்மகள் வந்தாள்
நடிகை ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் நடிப்பில் வரும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கி உள்ளார்.
ஒரு அப்பாவிப் பெண் மீது தவறாக குற்றம் சுமத்தப்படுகிறது. அந்தப் பெண்ணை நேர்மையான வக்கீல் ஒருவர் காப்பாற்றி விடுவிக்கும் கோர்ட்டு விசாரணைதான் இந்த படத்தில் கதை
ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது.
ஜோதிகாவின் பேச்சு
இந்தப் படம் தமிழ் சினிமாவில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த, கொரோனா ஊரடங்கு என்பதால் வீடியோ கால் மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோதிகா. இதில் முழுக்க தமிழில் பேசினார். இந்த வீடியோ வெளியானது.
ராதிகா பாராட்டு
ஜோதிகாவின் பேட்டிக்கு நடிகை ராதிகா சரத்துகுமார் பாராட்டு தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
நம்பிக்கையுடன், தெளிவாக தமிழைப் பேசும் ஜோதிகாவின் முயற்சியை நான் பாராட்டுகிறேன். எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. வடக்கிலிருந்து இங்கு வந்து இதைக் கச்சிதமாகச் செய்த ஒரே நடிகை. அவருக்குப் பாராட்டுகள்.
இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் டிரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.