May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

மாவட்ட எல்லையை தாண்டி வந்த குதிரைக்கு கொரோன பரிசோதனை – தனிமைப்படுத்துப்பட்டது

1 min read

Coronal examination of the horse crossing the district – isolated

28-5-2020

மாவட்ட எல்லை தாண்டி வந்த குதிரைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் அந்தக் குதிரையும், அதை ஓட்டிவந்தவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தனிமைப்படுத்துதல்

கொரோனா பரவி வரும் இந்த காலத்தில் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் மற்ற மாட்டங்களுக்குச் சென்றால் அவர்கள் இரண்டு நாட்கள் தனிமைப்படுகிறார்கள். அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்று தெரியவந்தால்தான் வீட்டுக்கு அனுப்புகிறார்கள். ஆனால் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்கவும் அறிவுறுத்துகிறார்கள்.

குதிரை

இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் கடுமையாக பரிசோதிக்கப்படுகிறார்கள். இதேபோல் மாவட்டம் விட்டு மாவட்டம் வந்த ஒரு குதிரையும் கொரோனா தனிமையில் சிக்கி உள்ளது.

அந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் உள்பட 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே இந்த 10 மாவட்டங்களும் சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

இந்த நிலையில், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரஜோரி பகுதியைச் சேர்ந்த ஒருவர், சோபியான் மாவட்டத்தில் இருந்து தனது குதிரையில் சவாரி செய்த படி ரஜோரிக்கு வந்துள்ளார். இவர் அதிகாரிகளிடம் எந்த முன்அனுமதியும் பெறவில்லை.

கடந்த திங்கட்கிழமை இரவு குதிரையில் புறப்பட்ட அவர் முகல் சாலை வழியாக ரஜோரியை வந்தடைந்தார். கடும் குளிர் காரணமாக அந்த சாலை மூடப்பட்டு இருந்தது. இதனால் எந்த தொந்தரவும் இல்லாமல் குதிரையில் சவாரி செய்து வந்துவிட்டார்.

பச்சை மண்டலமான ரஜோரியை வந்தடைந்ததும் மாவட்ட எல்லையிலேயே அவரை தடுத்து நிறுத்திய போலீசார் குதிரையையும், அதனை ஓட்டி வந்தவரையும் பிடித்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதன் முடிவு வரும் வரை குதிரையும் அதன் உரிமையாளரும் தனிமை படுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறினார்கள். மருத்துவ அறிக்கை வரும் வரை குதிரையை வீட்டில் மற்ற விலங்குகளிடமிருந்து தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்றும் அதனை ஓட்டி வந்தவரையும் தனிமை படுத்தவேண்டும் என்றும் அவர்கள் குடும்பத்தினரிடம் டாக்டர்கள் கூறிவிட்டனர்.

இதனால் அந்த குதிரை வாயில் பாலிதீன் போட்டு கட்டப்பட்ட நிலையில், லாடத்தில் தனியாக நிறுத்தப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.