தமிழகத்தில் 1-ந் தேதி முதல் 4 சிறப்பு ரெயில்கள்
1 min read
4 special trains In Tamil Nadu from June 1st
29-5-2020
தமிழகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 4 சிறப்பு ரெயில்கள் இயககப்படுகின்றன. ஆதற்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சிறப்பு ரெயில்கள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டதால் சில மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. ஆனால் தமிழகத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் வருகிற 1- ந் தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதாவது கோவை -காட்பாடி, திருச்சி -நாகர்கோவில், மதுரை -விழுப்புரம், கோவை -மயிலாடுதுறை ஆகிய 4 வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
முன்பதிவு
இதற்கான முன்பதிவு குறித்த அறிவிப்பு இன்னும் வரவில்லை. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் சென்னையில் இருந்து எந்த ரெயிலும் இயக்கப்படவில்லை.