மராட்டிய மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 166 பேர் பலி
1 min read
166 people killed in Maharashdra one day
29-5-2020
மராட்டிய மாநிலத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 116 பேர் இறந்தனர். இதனால் அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது விட்டது.
மராட்டியத்தில்…
இந்தயாவில் மராட்டிய மாநிலத்தில்தான் அதிக அளவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் மூன்றில் ஒரு சதவீதம் அங்கு தான் உள்ளது.
மராட்டிய மாநிலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் புதிதாக 2,682 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 62,228 ஆக அதிகரித்தது.
166 பேர் சாவு
மராட்டிய மாநிலத்தில் இன்று மட்டும் 116 பேர் இறந்துள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில், மொத்த பலி 2,098 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவிலிருந்து இன்று 8,381 பேர் பூரண
குணம் அடைந்துள்ளனர்.. இதனையடுத்து மாநிலத்தில் மீண்டவர்கள் எண்ணிக்கை 26,997 ஆனது. தற்போது 33,133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பையில்…
மராட்டிய மாநிலத்தில் மும்பையில் மட்டும் 36,932 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 1,173 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மும்பையில் 1,447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 38 பேர் பலியாகியுள்ளனர்.