May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

பொன்மகள் வந்தாள் படத்தை “ஓடிடி” க்கு முன்பே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது

1 min read

Tamil rockers have released the Ponnamma Vandal picture before “Oddi”

29-5-2020

நடிகை ஜோதிகா நடித்த “பொன்மகள் வந்தாள்” படம் “ஓடிடி”-யில் வெளியாகுமூ முன்பே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பொன்மகள்

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் “பொன்மகள் வந்தாள்” என்ற படம் உருவானது. இதில் ஜோதிகா நடித்துள்ளார்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் “பொன்மகள் வந்தாள்” படத்தை நேரடியாக “ஓடிடி” தளத்தில் வெளியிட திட்டமிட்டனர்.
அதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் படத்தை அதற்கு முன்பாகவே வெளியிட்டனர். அதற்கு என்னக் காரணம் தெரியுமா?
படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக வெளியிட்டதால், திட்டமிட்டதற்கு முன்னதாகவே “ஓடிடி” யில் வெளியிட ஏற்பாடு செய்துவிட்டனர்.

அதிர்ச்சி

பெரும்பாலான படங்கள் திரைக்கு வந்தவுடன் தமிழ் ராக்கர்ஸில் வெளியிட்டு விடுகிறார்கள். அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியாமல் திரைத்துறையினர் தவித்து வருகிறார்கள். தற்போது பொன்மகள் வந்தாள் திரைப்படமும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகி விட்டது. அதுவும் ஓடிடி தளத்தில் என்ன தரத்தில் வெளியானதோ, அதேபோன்று தமிழ் ராக்கர்ஸிலும் வெளியிட்டு உள்ளனர். இதனால் சினிமா உலகத்தின் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தியேட்டரில் வெளியாகும் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. தற்போது ஓடிடி-யில் ரிலீசாகும் படங்களையும் திருட்டுத்தனமாக வெளியிட்டு வருவதால் திரைத்துறையினரை கலக்கமடைய வைத்துள்ளது.. இதற்காக சினிமா துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதை தடுக்க முடியவில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.