May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க முடியாது; ஐகோர்ட்டு தீர்ப்பு

1 min read

10th public Exam cannot be postponed; High court Judgment

3-5-2020

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுவை மதுரை ஐகோர்ட்டு கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா நேரத்தில் தேர்வை நடத்தினால் மாணவர்களின் மன நிலை பாதிக்கப்படும் என்று பல் வேறு கோரிக்கைகள் வந்தன. இதனால் அந்த பொதுத்தேர்வை ஜூன் 15-ந் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தென்காசியை சேர்ந்தவர் வழக்கு

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி தென்காசியை சேர்ந்த கனகராஜ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று(புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-

தள்ளுபடி

மனுதாரர் கூறியபடி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே பிரச்சினை உள்ளது. என்றாலும் தேர்வை ஒத்தி வைப்பது மாணவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும், மாணவர்கள் நலன் கருதியே 10-ந் வகுப்பு தேர்வு நடத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.