May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆசிரியர்கள் 8-ந் தேதிக்குள் பணிபுரியும் மாவட்டத்திற்கு வர உத்தரவு

1 min read
Seithi Saral featured Image


Teachers are ordered to come to the working district with in 8th June

3-5-2020
வருகிற 15-ந் தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதால் வரும் 8-ந் தேதிக்குள் ஆசிரியர்ள் அனைவரும் தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் பல தள்ளி வைக்கப்பட்டன.
கடந்த மார்ச் 24-ந் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்துவிட்டதால் பிரச்சினை இல்லை. பிளஸ் 1 தேர்வுகளில் ஒன்றே ஒன்றைத் தவிர மற்ற தேர்வுகள் முடிந்துவிட்டன. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கவே இல்லை.

ஊரடங்கு காரணமாக பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 தேர்வு ஒன்று, 10-ம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கால அட்டவணைப்படி எதுவும் நடத்த முடியாமல் போனது.

இருப்பினும், கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பாக்கியுள்ள பிளஸ் 1 தேர்வுகள் நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ந் தேதி முதல் 12ந் தேதி வரை நடைபெறும் என அறிவித்தது. ஆனால் கொரோனா காலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது அவர்களின் மனநிலை பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் தேர்வு ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றி தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, ஜூன் 15-ந் தேதி முதல் ஜூன் 25-ந் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 11-ம் வகுப்பு தேர்வு ஜூன் 16-ந தேதி நடைபெறும் என்றும் 12-ம் வகுப்பு மறு தேர்வு ஜூன் 18-ந் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு தேர்வை 15-ந் தேதி நடத்தக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது.

ஆசிரியர்களுக்கு உத்தரவு

இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இன்னும் 12 நாட்களே உள்ளதால், தமிழகத்தில் வரும் 8-ந் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களின் வருகையை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட்

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் உடன் முகக்கவசங்களையும் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வழியாக அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு:-
பொதுத்தேர்வை நல்முறையில்நடத்த பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதன்படி பள்ளி வளாகத்தை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.

இதுதவிர விடைத்தாளுடன் முகப்பு சீட்டை தைத்து தயாராகவைத்திருக்க வேண்டும். அதனுடன் கூடுதல் விடைத்தாள்கள் மற்றும் சிறப்பு உறைகளை மாவட்டதேர்வுத்துறை அலுவலகத்தில் முன்னரே பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல், மாணவர்களின் பழைய நுழைவுச்சீட்டையே எந்த மாற்றமும் இன்றி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நுழைவுச்சீட்டில் முதன்மை தேர்வுமையத்தின் பெயரும், தங்கள் பள்ளிகளின் பெயரும் இடம்பெற்றிருக்கும். எனவே, மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் பள்ளிகளின் விவரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். வேறு மாநிலம் மற்றும்மாவட்டங்களுக்கு சென்றமாணவர்கள் சொந்த இருப்பிடத்துக்கு திரும்பிவிட்டதை உறுதிசெய்ய வேண்டும்.

முகக்கவசம்

அதேபோல், மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கும்போதே முகக்கவசமும் தரவேண்டும். 10-ம்வகுப்பு மாணவருக்கு 3 முகக் கவசமும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கு தலா ஒரு முகக்கவசமும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.