May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி

1 min read
Train dogs to find Corona patients

3-5-2020

கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க நாயகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆய்வு இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

மோப்ப நாய்

மனிதர்களை விட விலங்குகளுக்கு மோப்ப சக்தி அதிகம். அதிலும் நாய்க்கு அதிகமாக மோப்ப சக்தி உண்டு. இதனால்தான் போலீசார் துப்பறியும் பணிக்கு நாயை பயன்படுத்துகிறார்கள். அதற்காக அந்த நாய்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கிறார்கள்.

நாய்களுக்கு வழங்கும் இந்த பயிற்சி குற்றவாளிகளை கண்டு பிடிக்க மட்டுமல்ல. வெடிகுண்டுகளை கண்டு படிக்கவும் பயன்படுகிறது.

தற்போது நோயாளிகளை கண்டறிய இதேபோன்ற நாய்களை பயன்படுத்துகிறார்கள். ஒருவருக்கு புற்று நோய் இருந்தால் அதை மருத்துவ பரிசோதனை செய்துதான் கண்டறிய வேண்டும். ஆனால் ஒரு புற்று நோயாளிளை நாய்கள் மூலம் கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டது. சில வகை புற்றுநோய்கள், பார்கின்சன் நோய் மற்றும் மலேரியாவைக் கண்டறிய நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வெற்றியும் கண்டனர்..

கெரோனா

அதேபோல் இப்போது கொரோனா நோயாளிகளை கண்டறிய நாய்களை பயன்படுத்தும் ஆய்வு இங்கிலாந்தில் நடந்து வருகிறது. லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின், டர்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமான மெடிக்கல் டிடெக்சன் ஆகியவை நாய்களால் நடத்தப்படும் இந்த ஆராய்ச்சிக்கு 5,00,000 பவுண்டுகள் வழங்கி உள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்து உள்ளது.
இந்த ஆராய்ச்சிக்காக லாப்ரடர்கள் மற்றும் காக்கர் ஸ்பானியல்ஸ் நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கொரோனா நோயாளிகளின் வாசனையின் மாதிரிகள் நாய்களுக்கு நுகர பயிற்சி அளிக்கப்படம். மேலும் அவற்றின் வாசனையை நோய்த்தொற்று இல்லாதவர்களிடமிருந்து
வேறுபடுத்தி அறிய கற்பிக்கப்படும்.

ஒரு மணி நேரத்தில் 250 பேர்

“இந்த கண்டுபிடிப்பு விரைவில் நல்ல முடிவுகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கண்டுபிடிப்புக்கான மந்திரி ஜேம்ஸ் பெத்தேல் கூறினார்.

இந்த பரிசோதனை வெற்றி அடைந்துவிட்டால், ஒரு நாயானது ஒரு மணி நேரத்தில் 250 பேரை பரிசோதிக்கும். இந்த நாய்களை பொது இடங்களிலும் விமான நிலையங்களிலும பயன்படுத்தப்படலாம் என்று கூறியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.